Home இலங்கை அரசியல் ரணிலின் கைது: யூடியூபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ரணிலின் கைது: யூடியூபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்படுவதற்கு முன்னர் யூடியூபர் சுதத்த திலகசிறி வெளியிட்ட கருத்து
குறித்து சிறப்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த உள்ளது.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக்காவலில்
வைக்கப்படுவார் என்று சுதத்த திலக்சிறி கடந்த வெள்ளிக்கிழமை தனது யூடியூப்
தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் இது குறித்து விசாரணை நடத்தக் கோரி ஐக்கிய தேசியக் கட்சி
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டை செய்துள்ளது.

சிறப்பு புலனாய்வு பிரிவின் விசாரணை

இந்தநிலையிலேயே, சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கும் என்று
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version