Home இலங்கை அரசியல் கொழும்பில் நேற்றிரவு ரணிலுக்கு வழங்கப்பட்ட விருந்து!

கொழும்பில் நேற்றிரவு ரணிலுக்கு வழங்கப்பட்ட விருந்து!

0

இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜெங்ஹாங் கொழும்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு இரவு விருந்தளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விருந்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் விருந்து 

இதன்போது முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது 76 ஆவது பிறந்தநாளை இன்று மார்ச் 24 கொண்டாடுகின்றார்.

1949 ஆம் ஆண்டு மார்ச் மதம் 24 ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் 8-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் ஐந்து தடவைகள் பிரதமராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் இலங்கை அரசியலில் தனக்கென ஓர் தனி அடையாளத்தை பதித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

NO COMMENTS

Exit mobile version