Home இலங்கை அரசியல் ரணிலுக்கு அநுர வைத்த செக் : அதிரடியாக இடம் மாற்றப்பட்ட பாதுகாப்பு அதிகாரி

ரணிலுக்கு அநுர வைத்த செக் : அதிரடியாக இடம் மாற்றப்பட்ட பாதுகாப்பு அதிகாரி

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான தலைமை காவல்துறை கண்காணிப்பாளர் அசோக ஆரியவன்சவே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காங்கேசன்துறை (Kankesanturai) காவல்துறைக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இடமாற்றம் 

இந்த இடமாற்றம் இன்று (01) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

தலைமை காவல்துறை கண்காணிப்பாளர் அசோக ஆரியவன்ச, ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

மேலும், 15 ஆண்டுகள் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்படத்தக்கது. 

🛑 you may like this…!

https://www.youtube.com/embed/NZ6mtsThwW0

NO COMMENTS

Exit mobile version