Home இலங்கை சமூகம் ரணிலின் வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம்!

ரணிலின் வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

அரச நிதி துஷ்பிரயோக வழங்கிலிருந்து ரணிலுக்கு பிணை வழங்கப்பட்டதன் பின்னர் அவர்கள் நேற்று வெளியேறியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நுலுபுலி லங்காபுர, தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளை வழங்கினார்.

தனிப்பட்ட வைத்தியரை அனுக வாய்ப்பு

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறானதொரு பின்னணியில், அவர் இன்னும் இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி இனி ஒரு கைதி அல்ல என்பதால், அவர் தனது தனிப்பட்ட வைத்தியரையும் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version