Home இலங்கை அரசியல் சிலிண்டரை கைவிட்ட பங்காளிகளால் உருவாகும் புதிய கூட்டணி

சிலிண்டரை கைவிட்ட பங்காளிகளால் உருவாகும் புதிய கூட்டணி

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் (SLPP) இருந்து விலகி, கடந்த பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அதன் சில பங்காளி கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துறையாடல் நேற்றையதினம் (19.12.2024) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

அரசியல் கூட்டணி

இந்த கலந்துரையாடலில் 28 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர உள்ளிட்ட தரப்பினர் விரைவில் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version