ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விசேட கூட்டமொன்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதிபர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த கூட்டமானது நேற்று(25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சுரேஸ் சாலேதான்: சரத் பொன்சேகா
பொருளாதார முன்னேற்றம்
இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றதுடன் இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனும் கலந்துக்கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை! பிள்ளையானுக்கு மட்டும் அனுமதி கிடைத்தது எப்படி..
நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதாக சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான பணி
இதைதொடர்ந்து கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர, “உள்ளூராட்சி சபைகளில் பணியாற்றும் 8400 ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் பெற்றுத் தருமாறு வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஊழியர்களுக்கு மிக விரைவில் நிரந்தர நியமனம் வழங்கி தேவையான பணிகளை செய்து தருவோம் அத்தோடு தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை ஆனால் இந்த ஆண்டு கண்டிப்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பொதுஜன பெரமுன மற்றும் நாம் அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம் என நம்புவதுடன் அதிபர் தேர்தல் வேட்பாளர் யார் என்பது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மருத்துவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக சன்ன ஜயசுமன தெரிவு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |