நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சையாக போட்டியிடவுள்ளார்.
வேட்புமனு தாக்கல்
இதற்கமைய, அவர் இன்று (15) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.