Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிக்க இணைவு பேச்சுவார்த்தையில் ரணில்- சஜித்

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிக்க இணைவு பேச்சுவார்த்தையில் ரணில்- சஜித்

0

Courtesy: Sivaa Mayuri

 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் முகாம்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

கால தாமதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஆகியோரின் இரண்டாம் நிலை முகாம்களுக்கு இடையில் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிகளை மாற்றியமைக்க ஒன்றிணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இந்த விவாதங்களில் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும்,  தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிக்கும்  இந்த இரண்டு தரப்பினதும் முயற்சிகள் இப்போது  கால தாமதமாகிவிட்டதாக அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version