Home இலங்கை அரசியல் நாட்டை மீட்டெடுக்க யாரும் முன்வராத போது ரணில் எடுத்த அதிரடி முடிவு

நாட்டை மீட்டெடுக்க யாரும் முன்வராத போது ரணில் எடுத்த அதிரடி முடிவு

0

“நாடு அதளபாதாளத்துக்கு போயிருந்த நிலையிலே எவரும் நாட்டை மீட்டெடுக்க முன்வராத போது நான் அந்த சவாலை ஏற்று நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுத்துள்ளதாக“ அதிபர் ரணில் (Ranil) சொல்லியிருந்ததாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்களை ரணில் விக்ரமசிங்க தற்போது ஆரம்பித்துள்ளதாக தோன்றுகின்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த நிலையில் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற இணக்கப்பாட்டை ரணில் தன்னுடைய சாதனையாக காட்ட முயற்சிக்கின்றார் எனவும் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார் 

அத்துடன் கட்டணங்கள் செலுத்தப்பட்ட பல விளம்பரங்களின் ஊடாகவும், தன்னை மீண்டும் மக்கள் மத்தியில் நிலைநாட்டி 2048 ஆம் ஆண்டு இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…

https://www.youtube.com/embed/1c2dJ-Q_vAc

NO COMMENTS

Exit mobile version