முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பல உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள ஒரு குழு ரணில் விக்ரமசிங்கவின் எதிர்க்கட்சித் தலைமையின் கீழ் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய ஜனநாயக முன்னணி
அத்தோடு, பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக ரணில் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனடிப்படையில், கட்சியின் இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவர் பதவி விலகல் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.