Home இலங்கை அரசியல் இன்று இந்தியா பறக்கிறார் ரணில்

இன்று இந்தியா பறக்கிறார் ரணில்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இன்று (27) இந்திய(india) தலைநகர் புதுடில்லிக்கு செல்லவுள்ள நிலையில் அங்கு குறிப்பிடத்தக்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து உரை நிகழ்த்தவுள்ளார்.

இந்தச் சொற்பொழிவு நாளையதினம் (28) புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நடைபெறும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்துவார்கள்.

இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் 

குறுகிய காலத்தில் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். முன்னாள் ஜனாதிபதி மார்ச் 2 ஆம் திகதி இலங்கைக்கு திரும்ப உள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version