Home இலங்கை அரசியல் ரணில் மொட்டு கட்சியுடன் இணைய வேண்டும்! வலியுறுத்தும் ராஜபக்ச ஆதரவு எம்.பி

ரணில் மொட்டு கட்சியுடன் இணைய வேண்டும்! வலியுறுத்தும் ராஜபக்ச ஆதரவு எம்.பி

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிக்காவிட்டால் அதிபர் தேர்தலில் இரண்டு கட்சிகளும் பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேரிடுமென அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க (S.B Dissanayake) தெரிவித்துள்ளார்.   

அதேநேரம், இரண்டு கட்சிகளுக்கிடையிலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மொட்டு கட்சியின் ஆசியுடனும் ஆதரவுடனும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) களமிறங்கினால், நிச்சயம் வெற்றி பெறுவார்.

அதிபர் தேர்தல் 

எனினும், தமது கட்சியின் ஆதரவின்றி அதிபர் தேர்தலில் அவர் வேட்பாளராக களமிறங்கும் பட்சத்தில் நிச்சயம் தோல்வியடைவார்.

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை எமது கட்சி கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அவர் அதிபராக நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், எமது கட்சி எதிர்பார்த்த அரசாங்கம் அமையவில்லை. இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

இதனை தொடர்ந்து, அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்கும் பட்சத்தில், அவரால் நிச்சயம் வெற்றி பெற முடியும்” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version