முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் விரைவாக குணமடைய வேண்டுமென பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணிலின் உடல்நிலை..
“பிரித்தானியாவின் வோல்வர் ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட பயணமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, அவரின் பாதுகாப்பிற்காக சென்ற மெய் பாதுகாவலர்களுக்கு அரச நிதியை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த வழக்கில் இருந்து நிரந்தரமாக விடுப்பட வேண்டும்.
அதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் பெருந்தோட்டப் பகுதிகளில் நாளை விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன” என இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
