இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவினால் குற்றம் சாட்டப்பட்ட சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மறுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த பெப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு விஜயம் செய்திருந்த போது, அல் ஜசீராவிற்கு (Al Jazeera) வழங்கிய நேர்காணல் நேற்றைய தினம் (07.03.2025) ஒளிபரப்பப்பட்டது.
இதன்போது பல சந்தர்ப்பங்களில் காரசாரமாக மாறிய இந்த விவாதத்தின் போது, போராட்டம், பொருளாதார நெருக்கடி மற்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் போன்ற பல தலைப்புகளில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
சட்டவிரோத கொலை
இதன்போது, இலங்கை இராணுவதளபதியாகயிருந்தவேளை யுத்தகுற்றங்களில் சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டார் என அமெரிக்காவினால் குற்றம்சாட்டப்பட்ட சவேந்திர சில்வாவிற்கு மீண்டும் நியமனம் வழங்குவது குறித்து ரணில்விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
தனது முடிவை நியாயப்படுத்திய ரணில் விக்கிரமசிங்க சவேந்திரசில்வா அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற விடயங்களிற்கும் காசாவில் இடம்பெற்ற விடயங்களிற்கும் இடையில் தாங்கமுடியாத ஒற்றுமையுள்ளது,இரு இடங்களிலும் நீங்கள் பொதுமக்களை கடற்கரையை நோக்கி தள்ளினீர்கள்.
தொடர்ச்சியான இடைவிடாத முடிவற்ற குண்டுவீச்சினை மேற்கொண்டீர்கள்,பொதுமக்களை மனிதாபிமான முற்றுகைக்குள் உட்படுத்தினீர்கள்,மயக்கமருந்து கூட இல்லாமல் மருத்து சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது, ஐந்து மாதங்களில் 45000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என ஐநா மதிப்பிடுகின்றது, யுத்தத்தின் இறுதி நாட்களில் நாளாந்தம் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்,மேலும் பலருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை’’ என பேர்ள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மதுரா இராசரட்ணம் தெரிவித்தார்.
இந்த குற்றங்கள் ஏன் இடம்பெற்றன என்றால் நீங்கள் ஒரு அரசியல் அமைப்பொன்றை கொண்டிருக்கின்றீர்கள், ரணில்விக்கிரமசிங்கவும் இதன் ஒரு பகுதி,இது கடந்த 70 ஆண்டுகளாக நல்லாட்சியை பலிகொடுத்து,நீதியை பலிகொடுத்து , பெரும்பான்மையினத்தவர்களை மகிழ்வித்து,இனவெறி அரசியலுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றது இதனால் என்ன நடக்கும், என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
https://www.youtube.com/embed/OXJhvhNNHWA
