Home இலங்கை அரசியல் ரணில் தனித்து விடப்படமாட்டார்! ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குப் பறந்த கடிதம்

ரணில் தனித்து விடப்படமாட்டார்! ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குப் பறந்த கடிதம்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கையில் இருந்து ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல் என்றும்,  அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த கடிதம் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் பேரவை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 

ரணிலின் அரசியல் சுதந்திரம்.. 

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

இலங்கையில் தற்போதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஜனநாயகம், அரசியல் சுதந்திரம் என்பன அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றன.

அவற்றில் முன்னாள் அரச தலைவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளமை அவரது அரசியல் சுதந்திரத்தை மீறும் செயற்பாடாகும்.

எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிடம் கோருகின்றோம்.

எம்மால் கையளிக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதி ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான இந்த அநீதிக்கு எதிராக உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதே ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் தனித்து விடப்பட மாட்டார். நாம் என்றும் அவருடன் நிற்போம் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version