Home இலங்கை அரசியல் ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதா.. பரிசோதனை நடந்ததாக தகவல்

ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதா.. பரிசோதனை நடந்ததாக தகவல்

0

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதை அறிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது நீரிழப்பு காரணமாக, இதயம் மற்றும் சிறுநீரகங்கள் தொடர்பான சில சிக்கல்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளார்.

 நாளை உறுதியான அறிக்கை 

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து நாளை உறுதியான அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சிறப்பு மருத்துவர்கள் குழுவினால் அவரது உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

எனினும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஒரு சில உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, சிறைச்சாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் நேற்றையதினம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட ரணில் விக்ரமசிங்க மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

 

NO COMMENTS

Exit mobile version