முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்க்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் வருகைத் தந்துள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலைக் காண இன்று காலை முதல் அரசியல் பரப்பின் முக்கியஸ்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.
மகிந்தவும் வந்தார்…
இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இன்று காலை ரணில் விக்ரமசிங்கவைக் காண சிறைச்சாலைக்கு விரைந்துள்ளார்.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியக் குற்றச்சாட்டில் சிஐடியினரால் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவரது மருத்துவ தேவையைக் கருத்திற் கொண்டு சிறைச்சாலை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
