Home இலங்கை அரசியல் இன்று சிஐடியில் ரணில்! முடிவுக்காக காத்திருக்கும் பலர்..

இன்று சிஐடியில் ரணில்! முடிவுக்காக காத்திருக்கும் பலர்..

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். 

தரமற்ற மருந்துகளை  நாட்டுக்கு இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

ரணிலிடம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் இருந்து பெறப்படவுள்ள வாக்குமூலத்தின் முதன்மை நோக்கம், அப்போதைய அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்ட முடிவுகளின் வெளிப்படைத்தன்மையை ஆராய்வதாகும் என்று சிஐடி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும், அப்போதைய அரசாங்கத்தின் தலைவராக முடிவெடுக்கும் செயல்பாட்டில் ரணில்  எவ்வாறு ஈடுபட்டார் என்பது தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று  தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பாக ஏற்கனவே பலர் சிஐடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்து  விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றமை விசாரணைகளின் அடுத்தக்கட்டம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ரணில் சிஐடியில் முன்னிலையாவது, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் தொடர்பில் தென்னிலங்கை அரசியல் அவதானிகள்  அதிக அவதானம் செலுத்துகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version