முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்
எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் தற்போதைய அரசாங்கத்துக்கு ஒரு
வருடம் நிறைவடைவதையொட்டி அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த மாதம் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படவுள்ள எதிர்ப்
புப் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்தல் மற்றும் தற்போதைய அரசியல்
நிலவரம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பொதுஜன ஐக்கிய முன்னணி தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சஞ்ஜீவ எதிரிமான்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசியல் ரீதியாக பொது வேலைத்திட்டம்
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஒரு கூட்டு அரசியல் திட்டத்தை தொடங்குவதற்கான பொறிமுறையை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.
ஐக்கிய மக்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
செயற்குழு கூட்டத்திலும், அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு நிர்வாகக் குழு கூட்டங்களிலும் இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி ஏகமானதாக முடிவெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://www.youtube.com/embed/gpPpr6bRv2Y
