Home இலங்கை அரசியல் கைதுக்கு பின் ரணிலின் முக்கிய அரசியல் சந்திப்பு!

கைதுக்கு பின் ரணிலின் முக்கிய அரசியல் சந்திப்பு!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) மற்றும் பிவித்துரு ஹெல உறுமய மத்திய குழு உறுப்பினர்களும் இடையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு அவரது இல்லத்தில் நேற்று (05) இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்க, கைது செய்யப்பட்டு பிணையில் வீடு திரும்பிய பின்னர்
இடம்பெற்ற முக்கிய அரசியல் சந்திப்பாக இது கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் உரிமைகள்

இதன்போது, தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் சர்வதேச சிவில் மற்றும் அரசியல்
உரிமைகள் உடன்படிக்கை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, தற்போது வெளிநாட்டில்
இருக்கும் தங்கள் தலைவர் உதய கம்மன்பிலவை (Udaya Gammanpila) தவறாகக் கைது செய்ய முயற்சிப்பதாக பிவித்துரு ஹெல உறுமய மத்திய குழு உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், குறித்த சந்திப்பில் பேசப்பட்ட ஏனைய விடயங்கள் குறித்த தகவல்கள்
வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிவிதுரு ஹெல உறுமயவின் உறுப்பினர்கள் முன்னதாக எதிர்க்கட்சி தலைவர்
சஜித் பிரேமதாசவையும் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version