Home இலங்கை அரசியல் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்க

புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்க

0

Courtesy: Sivaa Mayuri

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தாம் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தப் பயணத்தைத் தொடர்வதா அல்லது வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது பொருளாதார வீழ்ச்சிக்குத் திரும்பும் அபாயத்துக்கு செல்வதா என்பதைத் தீர்மானிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

பொருளாதார நெருக்கடி

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஏனைய தலைவர்கள் தங்கள் பொறுப்புகளைத் துறந்துள்ளனர்.

இந்தநிலையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேசத்திற்கு எதிர்காலம் இல்லை என்றும் ரணில் கூறியுள்ளார்.

தாம் வாக்குறுதியளித்தபடி எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். 

இதற்கிடையில் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், வேலைகளை உருவாக்குதல், வரிச் சுமையைக் குறைத்தல், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பாரம்பரியம் மற்றும் அமைதி முயற்சிகளைப் பாதுகாத்தல் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version