Home இலங்கை அரசியல் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகும் ரணில்

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகும் ரணில்

0

 எதிர்வரும் 28ம் திகதி லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

சட்டத்தரணி ஒருவரின் ஊடாக அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 28ம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் தாம் இவ்வாறு ஆணைக்குழு எதிரில் முன்னிலையாவதாக ரணில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து குறித்து வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அறிவித்திருந்தது.

தமது சட்டத்தரணி வெளிநாடு சென்றுள்ளதாகவும் இதனால் முன்னிலையாக முடியாது என ரணில் முன்னதாக அறிவித்திருந்தார்.

எனினும் தற்பொழுது ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாக தயார் என ரணில் விக்ரமசிங்க, சட்டத்தரணி ஊடாக அறிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version