Home இலங்கை சமூகம் ரணில் ஒரு கோடிக்கு மேல் வாக்குகளை பெறுவார் என பாலித தெரிவிப்பு

ரணில் ஒரு கோடிக்கு மேல் வாக்குகளை பெறுவார் என பாலித தெரிவிப்பு

0

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறுவார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சாதனை வெற்றியீட்டுவார் என தெரிவித்துள்ளார்.

அதிகளவான அரசியல் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

Source: https://tamilwin.com/article/ranil-will-get-10-million-votes-1723350307

NO COMMENTS

Exit mobile version