Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ரணில் வெளியிடவுள்ள விசேட அறிக்கை

ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ரணில் வெளியிடவுள்ள விசேட அறிக்கை

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

குறித்த அறிக்கையானது எதிர்வரும் வியாழக்கிழமை (17) வெளியிடப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.

விசேட அறிக்கை

இந்த விசேட அறிக்கையில் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை அவர் முன்வைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை எனவும் தீர்மானித்து பொதுத்தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கி வருகின்றார்.

அமைச்சரவை தீர்மானம்

அத்தோடு, ரணில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) அண்மையில் தெரிவித்திருந்தார்.

கடந்த எட்டாம் திகதி அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் அதனை தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், அமைச்சரவை அங்கீகாரத்திற்கமைய ஜனாதிபதி செயலகத்தின் கீழ், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகார செயலகம், பங்கேற்பு ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான மக்கள் சபை முறையை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சபை செயலகம் மற்றும் விவசாய நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version