Home முக்கியச் செய்திகள் விசாரணைக்கு வரும் ரணிலின் வழக்கு – கோட்டைநீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு

விசாரணைக்கு வரும் ரணிலின் வழக்கு – கோட்டைநீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு

0

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் மக்கள் கூட்டம் கூடும் என்பதால் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கபட்டுள்ளன.

கடுமையான சோதனை

குறித்த பகுதியில் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களது பயணப் பொதிகள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மேலும், கியூ வீதியில் வசிப்பவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டுமே அந்த வீதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக, அவரை இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You may like this

https://www.youtube.com/embed/Vl_oUqxH98k

NO COMMENTS

Exit mobile version