Home இலங்கை அரசியல் ரணிலின் அணி கப்பல் கொள்ளைக்கே பொருத்தமானது: அனுரவின் விமர்சனம்

ரணிலின் அணி கப்பல் கொள்ளைக்கே பொருத்தமானது: அனுரவின் விமர்சனம்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அணி கப்பல்களை கொள்ளையிடுவதற்கே பொருத்தமானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தன்னிடம் சிறந்த அணி இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரசார மேடைகளில் பேசி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நல்ல அணி என அவர் கூறுவது பிரசன்ன ரணதுங்க, லொஹான் ரத்வத்தே, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே போன்றவர்களையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டம்

இந்தக் கும்பல் கப்பல்களை கொள்ளையிட சோமாலியாவிற்கு அனுப்பி வைக்கவே பொருத்தமானவர்கள் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

  

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அனுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

Source: https://tamilwin.com/article/ranils-team-is-pirates-says-anura-1726158453

NO COMMENTS

Exit mobile version