Home உலகம் கனடாவில் முக்கிய உணவு ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் முக்கிய உணவு ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

கனடாவில் (Canada) பேஸ்ட்ரி உணவு வகைகள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பேஸ்ட்ரி வகைகளில் சல்மான் லா என்னும் பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேடிய ஊடகங்கள்

கடந்த செப்டம்பர் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் இந்த பேஸ்ட்ரி வகைகளை உட்கொண்ட 69 பேர் நோய்வாய் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே இந்த வகை பேஸ்ட்ரிகளை சந்தைகளில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றதாகவும் கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

சல்மான் லா என்னும் பாக்டீரியா தாக்கம் ஏற்பட்ட அதிக எண்ணிக்கையிலானவர்கள் க்யூபிக் மாகாணத்தில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version