Home முக்கியச் செய்திகள் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு

0

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு (Ranjan Ramanayake) எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்க வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழு உறுப்பினர் கே.எம். மஹிந்த சேனாநாயக்கவினால் (K.M. Mahinda Senanayake) உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு 

குறித்த மனுவில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கும் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை என தீர்ப்பளிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை “பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர மீதான தனிப்பட்ட பகைமையை தீர்த்துக் கொள்வதற்காகவே உதய கம்மன்பில புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

அத்துடன், முஸ்லிம் மற்றும் தமிழர்கள் மீது இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டு இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்த உதய கம்மன்பிலவின் கடந்த காலத்தை மக்கள் ஆராய வேண்டும் என கம்பஹா மாவட்ட வேட்பாளர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version