Home சினிமா காந்தாரா Chapter 1 படம் குறித்து Mimicry செய்த விவகாரம்… மன்னிப்பு கோரிய ரன்வீர் சிங்

காந்தாரா Chapter 1 படம் குறித்து Mimicry செய்த விவகாரம்… மன்னிப்பு கோரிய ரன்வீர் சிங்

0

காந்தாரா Chapter 1

கன்னட சினிமாவில் தயாராகி இந்திய சினிமாவில் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் காந்தாரா சாப்டர் 1.

கடந்த 2022ம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் ரூ. 15 கோடியில் தயாராகி ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இப்பட வெற்றியை தொடர்ந்து செம மாஸாக வெளியான அடுத்த பாகமும் வெளியாகி இப்படம் ரூ. 900 கோடி வரை வசூல் சாதனை படைத்திருந்தது.

ரன்வீர் சிங்

சமீபத்தில் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று முடிந்தது.

இதில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி ஆக்ரோஷமான முன பாவத்துடன் எழுப்பும் ஓ என்ற சத்தத்தை கிண்டலடிக்கும் வகையில் செய்து காட்டியதாக கூறப்படுகிறது.

அவர் பேசிய வீடியோ வெளியாக ரன்வீர் சிங் தெய்வத்தை கிண்டலடித்து பேசினார் என விமர்சனங்கள் எழ தற்போது நடிகர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த நிலையில் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாவில், நான் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை முன்னிலைப்படுத்தவே விரும்பினேன்.

பல லட்சம் மதிப்புள்ள காரை வாங்கியுள்ள தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா… விலை எவ்வளவு?

அந்த குறிப்பிட்ட காட்சியை செய்ய அவர் பட்ட கஷ்டங்கள் ஒரு நடிகராக என்னால் உணர முடிகிறது. நான் நம் நாட்டில் உள்ள கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை மதிக்கிறேன், யார் மனதை புண்படுத்தி இருந்தாலும் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version