Home முக்கியச் செய்திகள் சடுதியாக அதிகரித்து வரும் மரக்கறிகளின் விலை!

சடுதியாக அதிகரித்து வரும் மரக்கறிகளின் விலை!

0

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பல சாகுபடி நிலங்கள் சேதமடைந்துள்ளதால் காய்கறிகளின் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன.

அதன்படி, ​​தாழ்நில காய்கறிகளின் விலைகள் தினமும் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலவரம்

இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலைக் குறியீட்டின் நேற்றைய (19.12.2025) நிலவரப்படி, புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மையங்களில் ஒரு கிலோ போஞ்சி 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ தக்காளி 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 1100 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை சில்லறை விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேவேளை, ஒரு கிலோ கத்தரிக்காய் 550 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை சில்லறை விலையிலும் விற்பனை செய்யப்படும் நிலையில் ஒரு கிலோ கரட் மற்றும் கோவா 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சில்லறை விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version