Home சினிமா போலியான பிகினி போட்டோ.. AI பற்றி கடும் கோபமாக பதிவிட்ட நடிகை ராஷ்மிகா

போலியான பிகினி போட்டோ.. AI பற்றி கடும் கோபமாக பதிவிட்ட நடிகை ராஷ்மிகா

0

நடிகை ராஷ்மிகா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கை விட தற்போது ஹிந்தியில் தான் அவர் அதிகம் படங்கள் நடித்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கை விட தற்போது ஹிந்தியில் தான் அவர் அதிகம் படங்கள் நடித்து வருகிறார்.

அவரது நிச்சயதார்த்தமும் சமீபத்தில் நடந்து முடிந்து இருந்தது. இன்னும் சில மாதங்களில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்ய இருக்கிறார் அவர்.

AI பற்றி காட்டமான பதிவு

ராஷ்மிகா பிகினி உடையில் இருப்பது போன்ற சில புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. AI பயன்படுத்தி சிலர் அதை உருவாக்கி வைரலாக்கி இருக்கின்றனர்.

அது பற்றி காட்டமாக ராஷ்மிகா இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். “AI என்பது வளர்ச்சிக்கானது. அதை இப்படி தவறாக பயன்படுத்தி மோசமானவற்றை உருவாக்கி பெண்களை குறிவைப்பது, சில மக்களிடையே moral என்பது குறைந்து வருவதை காட்டுகிறது.”

“இணையம் என்பது உண்மையால் மட்டுமே ஆனது என இனி சொல்ல முடியாது. அதில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். AI தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். அதன் மூலமாக தான் கண்ணியமான சமூகத்தை உருவாக்க முடியும்” என ராஷ்மிகா பதிவிட்டு இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version