Home சினிமா குபேரா படம் பார்த்ததும் தனுஷுக்கு இப்படி மெசேஜ் செய்தேன்.. ராஷ்மிகா சொன்ன ரகசியம்

குபேரா படம் பார்த்ததும் தனுஷுக்கு இப்படி மெசேஜ் செய்தேன்.. ராஷ்மிகா சொன்ன ரகசியம்

0

தனுஷ்

தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், சிங்கர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட தனுஷ் நடிப்பில் கடந்த 20 – ம் தேதி வெளிவந்த திரைப்படம் குபேரா.

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜோதிகா செய்யலாம் ஆனால் என் பொண்ணு செய்தால் தப்பா?.. வனிதா விஜயகுமார் ஆதங்கம்

ரகசியம் 

இந்நிலையில், குபேரா படத்தின் சக்சஸ் மீட்டில் ரஷ்மிகா தனுஷ் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” நான் டான்ஸ் ஆடுவேன் என்பதை தாண்டி நன்றாக நடிப்பேன் என்று இந்த படத்தின் மூலம் சேகர் கம்முலா சார் காட்டியுள்ளார். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி சார்.

குபேரா படம் பார்த்ததும் தனுஷ் சாருக்கு ஓமைகாட், ஓமைகாட், ஓமைகாட் என மெசேஜ் செய்தேன். ஒரு சக நடிகராக உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் தனுஷ் சார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நீங்கள் நடிக்கும் விதம் எங்களை பிரமிக்க வைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.     

NO COMMENTS

Exit mobile version