Home சினிமா ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு படம்..வெளியான அறிவிப்பு! ஹீரோ யார்?

ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு படம்..வெளியான அறிவிப்பு! ஹீரோ யார்?

0

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.

டாடா குழுமத்தின் சேர்மன் ஆக பல வியக்கத்தக்க விஷயங்களை செய்த ரத்தன் டாடாவின் மறைவுக்கு பிரதமர் மோடி தொடங்கி சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.

வாழ்க்கை வரலாற்று படம்

இந்நிலையில் ரத்தன் டாடாவின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக ஜீ குழுமம் அறிவித்து இருக்கிறது. அதை அந்த நிறுவனத்தின் சிஇஓ புனித் கோயங்கா தெரிவித்து இருக்கிறார்.

முறையான அனுமதி கிடைத்த பிறகு, ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் எடுக்கப்படும் என அவர் கூறி இருக்கிறார்.

இந்த படம் உறுதியானால் ரத்தன் டாடாவாக நடிக்க எந்த ஹீரோ சரியாக பொருந்துவார் என நெட்டிசன்கள் பேச தொடங்கி இருக்கின்றனர். 

Source: https://cineulagam.com/article/ratan-tata-biopic-will-be-made-zee-punit-goenka-1728643770

NO COMMENTS

Exit mobile version