தாய்லாந்தின் புகெட் நகருக்கு புறப்பட்டுச் சென்ற இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட 16 நிமிடங்களில் ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது மீண்டுமொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தலைநகர் டெல்லியில் இருந்து மணிப்பூரின் இம்பால் நகருக்கு சென்ற இண்டிகோ(indigo) நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் நடுவானில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை அடுத்து மீண்டும் டெல்லியில்(delhi) அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு
இந்த நிலையிலேயே இன்றையதினம்(19) மீண்டும் மற்றுமொரு இந்திய பயணிகள் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமானம் (Boeing 737 Max 8) இன்று (ஜூலை 19) காலை 6.41 மணிக்கு தாய்லாந்தின் பூகெட்டிற்கு புறப்பட்டது.
மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம்
ஆனால், புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் ஹைதராபாத்திற்கே திரும்பி வந்தது. விமானம் தாய்லாந்திற்கு செல்லாமல், மீண்டும் தரையிறங்கியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. தொழில்நுட்ப கோளாறு தான் அவசர தரையிறக்கத்திற்கு காரணம் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானங்கள் தாமதம் ஏற்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு மிக முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
