நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டதாக எவ்வாறு கூற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதாக நிதி நிலைமை தரப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச இறையாண்மை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டதாக கூறி வருகிறார்.
பொருளாதாரம் மற்றும் நிதி நிலை, கடன் தொடர்பில் தர நிர்ணயங்களை மேற்கொள்ளும் முகவர் நிறுவனங்கள் வங்குரோத்து நிலை குறித்து அறிவிக்க வேண்டும்.
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு ரிப்பள் சீ ரேடிங் (மூன்று சீ தரப்படுத்தல்) இருக்க வேண்டும். சர்வதேச இறையாண்மை பிணைதாரர்களுடன் இலங்கை இன்னமும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
இவ்வாறான பின்னணியில் நாடு எவ்வாறு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டது என கேள்வி எழுப்பியுள்ளார்.