Home இலங்கை அரசியல் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக விமர்சிக்கும் ரவி கருணாநாயக்க

ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக விமர்சிக்கும் ரவி கருணாநாயக்க

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க(Ranil WIckremesinghe) தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(
Ravi Karunanayake) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

 இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது நன்று.

கடுமையான விமர்சனம்

ஆனால் யாரையும் வெளியேற்றும் நோக்கில் அவ்வாறு இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படக் கூடாது.

நேர்மையான முறையில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதே நேரம் இந்த இணைப்பை ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள ஒருசிலர் விரும்பவில்லை. அவர்களின் சதிகளுக்கு இடமளிக்கக் கூடாது.

அனைத்துக் கட்சிகளையும் இணைத்து பொதுக் கூட்டணியொன்றை ஏற்படுத்த நான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ரணிலுக்குச் சமீபமான ஒருசிலர் முட்டுக்கட்டைகளை போட்டதன் காரணமாக முன்னெடுக்க முடியாமல் போனது.’’ என கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version