Home சினிமா விவாகரத்துக்கு பின் மகன்களை முதல் முறை சந்தித்த ரவி மோகன்! வெளியான புகைப்படம்

விவாகரத்துக்கு பின் மகன்களை முதல் முறை சந்தித்த ரவி மோகன்! வெளியான புகைப்படம்

0

நடிகர் ரவி மோகன் கடந்த சில மாதங்களில் பல்வேறு பரபரப்பான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டது, மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தது, கெனிஷா என்ற பாடகி உடன் நெருக்கமானது என அவரை பற்றிய செய்திகள் பரபரப்பாக வந்துகொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கெனிஷா பாடிய பாடல் வரவேற்பை பெற்றதற்காக ரவி மோகன் சினிமா துறையினருக்கு பார்ட்டி கொடுத்து இருந்தார்.

மறுபுறம் ரவி மோகன் – ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து வழக்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை பற்றி அறிக்கை எதுவும் வெளியிட கூடாது என நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது.

ரவி மோகன் தனது மகன்களை கூட விட்டுவிட்டு போய்விட்டார் என ஆர்த்தி முன்பே குற்றம்சாட்டி இருந்தார்.

மகன்களை சந்தித்த ரவி மோகன்

இந்நிலையில் இன்று ரவி மோகன் தனது இரண்டு மகன்களையும் சந்தித்து பேசி இருக்கிறார். மூத்த மகன் ஆரவ் பிறந்தநாள் என்பதால் அவர் சந்தித்து கொண்டாடி இருக்கிறார்.

அந்த போட்டோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version