Home இலங்கை அரசியல் முல்லைத்தீவில் தீயணைப்பு பிரிவை உடனடியாக நிறுவுமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை

முல்லைத்தீவில் தீயணைப்பு பிரிவை உடனடியாக நிறுவுமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை

0

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவை உடனடியாக நிறுவ
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
அமைச்சர் சந்தன அபேரத்ன மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க
ஆகியோரிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைக்
கடிதம் கையளித்துள்ளார். 

மேலும் கடந்த 17.06.2025 அன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில்,
முல்லைத்தீவு மற்றும், மன்னார் மாவட்டங்களில் தீயணைப்புப் பிரிவை நிறுவ
நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் உரை
நிகழ்த்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகவே குறித்த பகுதிகளில் தீயணைப்பு
பிரிவை நிறுவ உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களான சந்தன அபேரத்ன,
விமல் ரத்நாயக்க ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version