Home இலங்கை கல்வி க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

0

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இது தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பம் செய்த மாணவர்கள் தங்களது முடிவுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழியாக, தமது பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளீடு செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பரீட்சைகள் திணைக்களத்தின் வலியுறுத்தல் 

இதேவேளை, இந்த மறுபரிசீலனை முடிவுகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள், இன்று (அக்டோபர் 9) நள்ளிரவு 12.00 மணி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் கடைசி திகதி எந்த காரணத்திற்கும் நீட்டிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

பரீட்சை முடிவுகள் தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், மாணவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் பிரிவு அலுவலகத்தை கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

1911, 0112784208, 0112784537, 0112785922 என்ற இலக்கங்களுடன் அல்லது 0112784422 என்ற ஃபேக்ஸ் இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version