ரீ ரிலீஸ்
புதிதாக ரிலீஸாகும் படங்களுக்கு இணையாக ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை தருகின்றனர்.
கில்லி, சச்சின், கேப்டன் பிரபாகரன், வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் ரீ ரிலீஸான போது ரசிகர்கள் அப்படங்களை எப்படி கொண்டாடினார்கள் என்பதை பார்த்தோம்.
அதே போல் கடந்த வாரம் ரீ ரிலீஸாகியுள்ள அஞ்சான் மற்றும் அட்டகாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை முதல் நாள் தந்தனர்.
அஜித்துக்கு வெறி பிடித்த ரசிகர்கள் இருக்கிறார்கள்.. பிரபல இயக்குநர் ஓபன் டாக்
வசூல்
இந்த நிலையில், மூன்று நாட்களில் இந்த இரண்டு படங்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அஞ்சான் திரைப்படம் ரூ. 60 லட்சமும், அட்டகாசமும் திரைப்படம் ரூ. 90+ லட்சமும் வசூல் செய்துள்ளது.
