Home உலகம் காணாமல் போனதா அனபெல்லா பொம்மை: ஒளிந்துள்ள அதிர்ச்சியளிக்கும் மர்மங்கள்

காணாமல் போனதா அனபெல்லா பொம்மை: ஒளிந்துள்ள அதிர்ச்சியளிக்கும் மர்மங்கள்

0

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்மையான அனபெல்லா பொம்மை காணாமல் போயுள்ளதாக இணைய தளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றது.

கடந்த வாரத்திலிருந்து அமெரிக்கா முழுவதும் அனபெல்லா பொம்மை நகர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், லூசியானா பகுதியில் அனபெல்லா பொம்மை நகர்வலம் சென்று கொண்டிருந்த போது அங்குள்ள லூசியானா உணவகத்தில் அதே நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பொம்மை

இதன்போது பொம்மையை நகர்வலத்தில் காணக்கிடைக்காத மக்கள், குறித்த பொம்மை காணாமல் போய்விட்டதாக இணையதளத்தில் செய்திகளை பரப்பியுள்ளனர்.

இதனால் குறித்த பொம்மை காணாமல் போனதால்தான் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி வைரலானது.

அனபெல்லா நகர்வலம் 

இந்தநிலையில், உண்மையிலேயே அனபெல்லா நகர்வலம் கொண்டு செல்லப்பட்டதா ? அருங்காட்சியகத்திலிருந்து காணாமல் போனதா ? என்பதெல்லாம் உறுதி செய்யப்படவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், குறித்த பொம்மை கவனமாக இருப்பதாகவும் ஒரு புறம் தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version