Home இலங்கை அரசியல் அநுர அரசிடமிருந்து தப்பித்துக் கொள்ள மகிந்த கும்பலின் சூழ்ச்சி அம்பலம்

அநுர அரசிடமிருந்து தப்பித்துக் கொள்ள மகிந்த கும்பலின் சூழ்ச்சி அம்பலம்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட ஏழு நாள் பிரித் போதனை ஒரு மறைமுக அரசியல் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

பாரிய நிதி மோசடி மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சமகால அரசாங்கத்தின் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் ஏழு நாள் பிரித் போதனை ஏற்பாடு செய்யப்பட்டதாக பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நிதி மோசடிகள்

கடந்த காலங்களில் மூடிமறைக்கப்பட்ட கடுமையான நிதி மோசடிகள் உட்பட 11 குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் பிரித் போதனை நிகழ்வுகள் நடைபெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.

காணி மோசடி வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version