இலங்கையில் இந்தியா தனது ஒபரேஷன் சாகர் பந்துவின் கீழ் கடந்த 2 ஆம் திகதி முதல் கண்டி மகியங்கனைப் பகுதியில் நடத்திய மிகப்பெரிய கள மருத்துவமனையை மூடி அதன் உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை நேற்று (14.12.2025) மீண்டும் இந்தியாவுக்கு திரும்பியெடுத்துவிட்டது.
இலங்கையின் சமகால வரலாற்றில் அதன் மண்ணில் வெளிநாடு ஒன்றால் இதுவரை அமைக்கப்பட்ட கள மருத்துவமனைகளில் இந்தியா இயக்கிய இந்த மருத்துவமனைதான் மிகப்பெரியது என்ற பதிவு உள்ள நிலையில் இது நேற்று மூடப்பட்ட நகர்வு உண்மையில் திட்டமிடப்பட்ட ஒரு நகர்வா? அல்லது அமெரிக்கப்படையினரின் களமிறகத்தால் வந்த நகர்வா? என்ற குறுகுறுப்பு வினாக்களும் உள்ளன.
இதற்கிடையே இலங்கையில் நடத்தப்படும் சட்டவிரோத போதைவிருந்துகளில் ஆளும் அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கும் மாட்டுப்படும் சம்பவங்கள் கிளம்பியமைக்கு அறிகுறியாக அனுரவின் தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாநகரின் துணை முதல்வர் ருவன் குமாரவின் 26 வயது புதல்வி இதற்குள் அகப்பட்ட சம்வம் வந்துள்ளது.
அனுர தரப்பின் முன்னாள் சபாநாயகரும் இந்த அரசாங்கம் குறித்த முதலாவது முறைகேட்டுக்குரிய சுழியை போட்டவருமான நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கடந்தவாரம் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் கைதாகி பின்னர் பிணையில் விடுவிப்பட்ட சம்பவத்தின் பின்னர் அதே தேசிய மக்கள் சக்தியின் கண்டிநகர துணை முதல்வரின் மகள் போதை விருந்து குற்றத்தில் மாட்டுப்பட்டுள்ளார்.
இவ்வாறான நகர்வுகளுக்கு இடையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பொண்டி கடற்கரையில் நேற்று யூதர்கள் மீது நடத்தபட்ட தாக்குதலை அடுத்து இலங்கையில் யூதர்கள் அதிகமாக நடமாடும் அறுகம் குடா உட்பட்ட இடங்களுக்கும் சடுதி பாதுகாப்பு தலையிடிகள் வந்துள்ள நிலையில் இவற்றை மையப்படுத்தி வருகிறது இன்றைய செய்திவீச்சு.
https://www.youtube.com/embed/xi-qlm0RCT8
