Home இலங்கை சமூகம் விவசாயிகளுக்கான உர மானியம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

விவசாயிகளுக்கான உர மானியம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

0

விவசாயிகளுக்கு உரமானியம் வழங்குவதற்கு தாமதமாகியதற்கான காரணத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வெளியிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று (26) நடைபெற்ற மக்கள் பேரணியில் ஜனாதிபதி குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

சிறுபோகத்திற்கான உர மானியத்திற்காக முழுமையாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் விவசாய மேம்பாட்டு திணைக்களம் தேவையான ஆவணங்களைத் தயாரிக்கத் தவறியதால் சிறிது தாமதம் ஏற்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வலுவான அரச சேவை

இந்த நிலையில், இது போன்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு வலுவான அரச சேவை அவசியம் என ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிகொல்லிகளின் விலையை குறைந்தது ஐம்பது வீதம் குறைக்க திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version