Home இலங்கை அரசியல் ரணிலின் பிணை மனு நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் வெளியானது

ரணிலின் பிணை மனு நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் வெளியானது

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட பிணை மனுவில் காத்திரமான ஆதாரங்கள் முன்வைக்கப்படாமையினால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கோட்டை நீதவான் நிலுபுலி லங்காதிலகா நேற்று தெரிவித்தார்.

ரணிலின் லண்டன் விஜயம் அரச உத்தியோகபூர்வமற்றது என்பதை பிரதிவாதி வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்த தவறியமையினால் பிணை மனு நிராகரிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து அழைப்பு வந்திருந்தால், பிரதிவாதி வழக்கறிஞர்கள் பொருத்தமான அழைப்புக் கடிதத்தையோ அல்லது துல்லியமான தகவலையோ வழங்க தவறிவிட்டதாக கூறப்படுகிறது.

பிணை மனு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் லண்டன் பணயமான, ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்பட 10 அதிகாரிகள் இந்தப் பயணத்தில் பங்கேற்றதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பிரிதானியாவுக்கான பயணத்திற்காக 1.66 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதி செலவிடப்பட்டுள்ளதாக ரணிலுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக குற்ற புலனாய்வு பிரிவுக்கு நேற்று அழைக்கப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version