‘Rebuilding Sri Lanka’ நிதி சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட நிதியாக இருக்க வேண்டும். எனவே இது பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஹர்ஷ டி சில்வா எம்.பி. தெரிவித்துள்ளார்.
சட்டச் சிக்கல்
‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ போன்ற சரியான சட்ட அடிப்படை இல்லாத நிதியை உருவாக்க முடியாது. ‘Rebuilding Sri Lanka’ நிதியம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.
அது இன்னும் செய்யப்படவில்லை. ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ நிதியை நாடாளுமன்றத்தில் உடனடியாக
அங்கீகரிக்க வேண்டும்.
இது சரியான வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டும்.
அரசாங்கம் மட்டுமே எல்லாவற்றையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.தனியார் துறையும் பங்களிக்க முடியும்.தனியார் துறையால் செய்ய முடியாததை அரசாங்கம் கையாள வேண்டும்.
இதற்கிடையில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ரூ. 500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்காக அரசாங்கத்திடம் போதுமான நிதி இருப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
