Home இலங்கை அரசியல் மத்தள விமான நிலைய கூட்டு உடன்படிக்கையில் திருத்தப் பரிந்துரைகள்

மத்தள விமான நிலைய கூட்டு உடன்படிக்கையில் திருத்தப் பரிந்துரைகள்

0

Courtesy: Sivaa Mayuri

நட்டத்தில் இயங்கும் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியாவின் சௌர்யா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஒஃப் ரீஜியன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான வரைவு வணிக ஒப்பந்தம், தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த ஒப்பந்தத்தில் மூன்று மாற்றங்களை செய்வது குறித்து அவர் பரிந்துரை செய்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

சீனா நிர்வகிக்கும் நிலை

இலங்கை அரசுக்கு சொந்தமான விமான நிலையம் மற்றும் ஏவியேசன் சேர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் என்பன இதுவரை காலத்தில், நிர்வாகத்தின் பேரில், நாட்டுக்கு வெளியே உள்ள ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தை இந்தியாவும் ரஷ்யாவும் நிர்வகிக்கும் அதே வேளையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா நிர்வகிக்கும் நிலை ஏற்படும் என்று அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version