Home இலங்கை அரசியல் சர்ச்சைக்குரிய கச்சத்தீவு விவகாரம்: இலங்கையுடன் இந்தியா இணக்கம்

சர்ச்சைக்குரிய கச்சத்தீவு விவகாரம்: இலங்கையுடன் இந்தியா இணக்கம்

0

இந்தியாவுக்கும் (India) இலங்கைக்கும் (Sri Lanka) இடையிலான கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான பிரச்சினை மற்றும் கச்சத்தீவு (Kachchatheevu) பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அது தொடர்பில் இன்று (28) மாலை அறிவிக்கப்படும் என இந்திய தரப்பு பேச்சாளர் ஒருவரை கோடிட்டு த ஹிந்து (The Hindu) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் உடன்படிக்கையின் விபரங்களையும் பேச்சாளர் தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் த ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

கச்சத்தீவு உடன்படிக்கை 

1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-28 ஆம் திகதிகளில் கச்சத்தீவு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டு 50 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த உடன்படிக்கை 1974 ஜூலை மாதம் 8 ஆம் திகதியன்றே நடைமுறைக்கு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழக முதல்வருக்கு ஜெய்சங்கர் (Jaishankar) அனுப்பிய கடிதத்தில், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு மத்திய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்றும், அதனை நம்பலாம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version