Home இலங்கை குற்றம் யாழில்18 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழில்18 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

0

யாழ்ப்பாணம்(Jaffna) – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி மூன்றாம்
வட்டார பகுதியில் கடற்கரையில் மறைத்து வைத்திருந்த 18 கிலோ கிராம் எடையுடைய
கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மீட்பு நடவடிக்கை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
நேற்றிரவு (15.06.2024) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், 18 கிலோ கிராம் கேரள கஞ்சாவையும் சந்தேக நபரையும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

Source: https://tamilwin.com/article/recovery-of-18-kg-of-kerala-ganja-in-jaffna-1718561194

NO COMMENTS

Exit mobile version