Home இலங்கை அரசியல் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்ட உலர் உணவு பொதிகள் மீட்பு: 3 பேர் கைது

வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்ட உலர் உணவு பொதிகள் மீட்பு: 3 பேர் கைது

0

மன்னாரில் (Mannar) வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால் வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த உலர் உணவு பொருட்கள் நேற்றையதினம் (13.11.2024) மன்னார்- யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் காவல்துறையினரால் வாகனம் ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வாகனம் ஒன்றை சோதனை செய்த போது குறித்த வாகனத்தில் ஒரு
தொகுதி உலர் உணவு பொருட்கள் காணப்பட்டுள்ளது.

உலர் உணவு பொருட்கள்

இதன்போது காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது குறித்த உலர் உணவு பொருட்கள் அரசியல் கட்சி ஒன்றினால் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்டமை தெரியவந்துள்ளது.

குறித்த பொருட்களை அடம்பன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதோடு, வாகனத்தின் சாரதி, உதவியாளர் உள்ளடங்களாக வாகனத்தில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் 6 லட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அடம்பன் காவல்துறையினர் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://www.youtube.com/embed/paogq6UtOhg

NO COMMENTS

Exit mobile version